இவாங்கா டிரம்புக்கு சமந்தா அளிக்கப்போகும் நினைவு பரிசு

  • IndiaGlitz, [Tuesday,November 28 2017]

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் இவாங்கா டிரம்ப் ஒருநாள் இந்திய பயணமாக இன்று வருகை தந்துள்ளார். இன்று தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தில் நடைபெறும் உலக தொழில் முனைவோர் மாநாட்டில் அவர் கலந்து கொள்ளவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பாரத பிரதமர் மோடியும் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தின் கைத்தறி சேலைகளுக்கான அம்பாசிடராக உள்ள நடிகை சமந்தா, இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் இவாங்கா டிரம்புக்கு ஒரு அழகான கைத்தறி சேலையை நினைவு பரிசாக வழங்கவுள்ளாராம். இதற்காக அவரே நெசவாளர்களிடம் பிரத்யேகமான டிசைனில் உருவாகியுள்ள சேலைகளில் சிலவற்றை தேர்வு செய்து வைத்துள்ளாராம். அவற்றில் ஒன்றை இன்று சமந்தா, இவாங்காவுக்கு பரிசாக வழங்க உள்ளார்.

இவாங்கா டிரம்ப் அடிப்படையில் ஒரு ஃபேஷன் டிசைனர் என்பதால் சமந்தா தேர்வு செய்த அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கைத்தறி சேலை அவரை அசத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

ஃபேஸ்புக்குடன் கூட்டணி வைத்தது தேர்தல் ஆணையம்

அரசியல் கட்சிகள் தான் தேர்தல் சமயத்தில் கூட்டணி வைப்பது வழக்கம். ஆனால் தற்போது தேர்தல் ஆணையமே உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்குடன் கூட்டணி வைத்துள்ளது

விஜய், அஜித், சூர்யா குறித்து கார்த்தி கூறியது என்ன?

கார்த்தி நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வசூலை அள்ளி கொண்டிருக்கின்றது. நடிகர் கார்த்திக்கு இந்த படம் ஒரு மைல்கல் என்றால் அது மிகையில்லை.

சுரேஷ் ரெய்னாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சச்சின்

சுரேஷ் ரெய்னா நேற்று தனது 31வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு இந்திய அணி வீரர்களும், கிரிக்கெட் ரசிகர்களும் நேரிலும், சமூக வலைத்தளங்கள் மூலமும் வாழ்த்து தெரிவித்தனர்.

இசைப்புயலா? இளம் இசைப்புயலா? 'தளபதி 62' இசையமைப்பாளர் யார்?

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' சூப்பர் ஹிட் வெற்றியை அடுத்து அவருடைய அடுத்த படமான 'தளபதி 62' திரைப்படம் வரும் ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்ததை ஏற்கனவே பார்த்தோம்.

சத்யம் சினிமா அதிபர் வீட்டில் வருமான வரி ரெய்டு

இன்று காலை சென்னை பெரம்பூரில் உள்ள சத்யம் S2 சினிமாஸ் தியேட்டர் அதிபர் வீடு மற்றும் அவருக்க்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது