ஒரே ஒரு நன்றி சொல்ல அமெரிக்காவுக்கு பறந்த சமந்தா
Send us your feedback to audioarticles@vaarta.com
திருமணத்திற்கு பின்னரும் தமிழ், தெலுங்கு திரையுலகில் பிசியாக இருக்கும் நடிகை சமந்தா நடித்த 'ரங்கஸ்தலம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் கணவர் நாகசைதன்யாவுடன் சமந்தா அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள சென்ட்ரல் பார்க் அருகே கணவர் நாகசைதன்யாவுடன் எடுத்த செல்பி புகைப்படம் ஒன்றை சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். பொதுவாக தனக்கு செல்பி எடுக்க பிடிக்காது என்றும் ஆனால் இந்த புகைப்படத்தில் ஒரு ஸ்பெஷல் இருப்பதாகவும், 8 வருடங்களுக்கு முன்னர் இதே இடத்தில் தான் தனக்கும் நாகசைதன்யாவுக்கும் காதல் தோன்றியதாகவும், அதற்கு நன்றி சொல்லும் விதமாக இந்த இடத்திற்கு மீண்டும் வந்து செல்பி எடுத்துள்ளதாகவும் சமந்தா தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லட்சக்கணக்கில் லைக்குகள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
சமந்தா தற்போது விஷாலுடன் 'இரும்புத்திரை', சிவகார்த்திகேயனுடன் 'சீமராஜா', விஜய்சேதுபதியுடன் 'சூப்பர் டீலக்ஸ் மற்றும் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான 'நடிகையர் திலகம்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் அனைத்தும் இந்த ஆண்டே வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments