வீட்டுக்கு செல்லவே விருப்பம் இல்லை : சமந்தா
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய்யுடன் 'தெறி', சூர்யாவுடன் '24', மகேஷ்பாபுவுடன் 'பிரம்மோத்சவம்', என ஒரே நேரத்தில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் சமந்தா, 2016ஆம் ஆண்டின் பிசியான நடிகைகளில் ஒருவர். நடிப்பு மட்டுமின்றி அறக்கட்டளை ஒன்றை தொடங்கி அதன் மூலம் சமூக சேவைகளையும் சமந்தா செய்து வருகிறார்.
இந்நிலையில் தனது பிசியான பணிகள் குறித்து சமந்தா கூறியபோது, 'எப்போதும் பிசியாக இருப்பது எனக்கு பிடித்த ஒன்று. வேலையில்லாமல் வீட்டில் சும்மா இருந்தால்தான் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். சினிமா மீதான என்னுடைய காதலுக்கு எல்லையே இல்லை. எனக்கு எப்போதும் படப்பிடிப்பில் இருக்க வேண்டும். இப்போதெல்லாம் படப்பிடிப்பு தளத்தை விட்டு வீட்டுக்கு செல்லவே பிடிக்கவில்லை. சினிமா என்பது எனது தொழில் அல்ல, அது என் வாழ்க்கை' என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த உலகத்தில் என்னைவிட மிக அழகான பெண்கள் எவ்வளவோ பேர் இருக்கும் நிலையில் கடவுள் எனக்கு கதாநாயகி என்ற அந்தஸ்தை கொடுத்துள்ளார். அந்த அந்தஸ்தை நான் காப்பாற்றி கொள்வேன்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com