'காத்துவாக்குல ரெண்டு காதல்' செம அப்டேட்டை வெளியிட்ட சமந்தா!

  • IndiaGlitz, [Thursday,April 14 2022]

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடித்துவரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் வரும் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்தப் படத்தின் செம அப்டேட்டை நடிகை சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்தப் படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் குறிப்பாக டப்பிங் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தனது பகுதியின் டப்பிங் பணிகளை முடித்ததாக நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவில் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் டப்பிங் பணியை முடித்துவிட்டேன். என்னைச் சுற்றியிருக்கும் அபூர்வமான மனிதர்களால் என்னுடைய வேலை எளிமையாகிறது, விரைவில் உங்கள் முன் இந்த படம் திரையிடப்படும், அனைவருக்கும் நன்றி’ என்று பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

More News

'பீஸ்ட்' படத்திற்கு கண்டனம் தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த்: என்ன காரணம்?

தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 'பீஸ்ட்' படத்திற்கு தன்னுடைய கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாக கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

'பீஸ்ட்' படம் பார்க்க சென்ற விஜய் ரசிகர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி: நிஜமானது வடிவேலு காமெடி!

தியேட்டரில் விஜய்யின் 'பீஸ்ட்' படம் பார்க்கச் சென்ற ரசிகர்களுக்கு வடிவேல் காமெடி நிஜமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

'ஆர்.ஆர்.ஆர்' படத்தை எஸ்.எஸ்.ராஜமவுலி எங்கே பார்த்தார் தெரியுமா? ஆச்சரியத்தில் பொதுமக்கள்!

பிரமாண்ட இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும்

'அந்த ஒன்றுக்கே டிக்கெட் காசு சரியாப்போச்சு': 'பீஸ்ட்' குறித்து டிடியின் பதிவு!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனம் பெற்று வந்தாலும் முதல் நாள் வசூலில் சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் மிகவும் அற்புதமான தந்தை: கணவருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறிய காஜல் அகர்வால்!

நீங்கள் ஒரு அற்புதமான தந்தையாக மாறப் போகிறீர்கள் என தனது கணவருக்கு நெகிழ்ச்சியுடன் கூடிய ஒரு பதிவை நடிகை காஜல் அகர்வால் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் .