விஜயகாந்த் பாணியில் ஸ்டண்ட் பயிற்சி செய்த சமந்தா.. வேற லெவலில் வைரலாகும் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கேப்டன் விஜயகாந்த் பாணியில் நடிகை சமந்தா வேற லெவலில் ஸ்டண்ட் பயிற்சி செய்யும் வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி யின் நடிகையான சமந்தா சமீப காலமாக உடல் நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைக்கு பின் தற்போது மீண்டும் புத்துணர்ச்சியுடன் திரையுலகில் களமிறங்கியுள்ளார்.
பாலிவுட்டில் உருவாகி வரும் ’சிட்டாடல்’ என்ற வெப் தொடரில் நடித்து வரும் சமந்தா தமிழ் தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி வருவதாகவும் விரைவில் அந்த படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவ்வப்போது தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வரும் நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வேற லெவலில் ஸ்டண்ட் பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘காலை தூக்கி அடிப்பது, பின்புறம் காலை தூக்கி ஸ்டண்ட் செய்வது கேப்டன் விஜயகாந்த் ஸ்டைல் என்றும், சமந்தாவின் இந்த வீடியோவும் அது போலவே உள்ளது என்று கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout