விஜய், சூர்யாவுக்கு நேர்மாறானவர் விஷால்: சமந்தா

  • IndiaGlitz, [Thursday,December 28 2017]

விஷால், சமந்தா, அர்ஜூன் நடித்த 'இரும்புத்திரை' படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்ட சமந்தா பேசியதாவது

இயக்குனர் பி.எஸ்.மித்ரன் ஒரு அறிமுக இயக்குனர் போலவே எனக்கு தோன்றவில்லை. முதல் நாளில் இருந்தே எங்கள் அனைவருக்கும் வழிகாட்டியாக இருந்தார். மேலும் இந்த படத்தில் ஜார்ஜின் கேமிரா தான் எங்களை ஸ்டைலிஷாக காண்பித்துள்ளது அவருக்கு எனது நன்றி. மித்ரன் மற்றும் ஜார்ஜ் மேலும் அதிக படங்களில் இணைந்து பணியாற்றுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

நான் விஜய், சூர்யாவுடன் நடிக்கும்போது அவர்களிடம் மிகவும் மரியாதையாக நடந்து கொள்வேன். ஆனால் விஷாலிடம் அதற்கு நேர்மாறாக ஜாலியாக நடித்தேன். அவர் என்னை விட இளையவர் என்று நான் நினைக்கும் அளவுக்கு அவரிடம் எனர்ஜி இருந்ததை பார்த்தேன். இந்த படத்தில் விஷாலின் லுக், நடிப்பு ஆகியவை பெஸ்ட் ஆக இருக்கும் என்பது எனது கருத்து

மேலும் எனது முதல் படமான 'பாணா காத்தாடி' படத்திற்கு பின் மீண்டும் யுவன் இசையமைக்கும் படத்தில் நடித்துள்ளேன். இவ்வாறு சமந்தா பேசினார்

 

More News

2017ஆம் ஆண்டின் டாப் 10 டீசர்: முதல் இரண்டு இடத்தை பிடித்த தளபதி-தல

டாப் 10 டீசர் பட்டியலில் முதல் இடத்தை தளபதி விஜய்யின் 'மெர்சல்' படமும், இரண்டாவது இடத்தில் தல அஜித்தின் விவேகம்' படமும் பெற்றுள்ளது.

நான் ஆர்.கே. நகர் தேர்தலில் நிற்க கூடாது என்று நினைத்தவர்களில் இவரும் ஒருவர்: விஷால்

நான் ஆர்.கே நகர் தேர்தலில் நிற்கமுடியாமல் போனதற்காக இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் மகிழ்ச்சி அடைந்ததாக விஷால் கூறினார்.

'நிமிர்' டைட்டிலை பிரியதர்ஷனிடம் பரிந்துரை செய்தவர் யார் தெரியுமா?

பொதுவாக ஒரு படம் எந்த வகையை சேரும் ,அப்படத்தில் என்ன எதிர்பார்க்கலாம் ஆகிய அம்சங்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க அப்படத்தின் தலைப்பு உதவியாக இருக்கும்

சன்னிலியோன் படத்தின் முழு டைட்டில் அறிவிப்பு

பிரபல பாலிவுட் நடிகை சன்னிலியோன் நடிக்கவுள்ள சரித்திர கதையம்சம் கொண்ட படத்தின் பாதி டைட்டில் 'தேவி' என்று ஒருசில மணி நேரத்திற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது முழு டைட்டிலும் வெளியாகியுள்ளது.

ரஜினியின் 20 வருட 'காலதாமதம்' சரிதானா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 1996ஆம் ஆண்டு முதன்முதலாக அரசியல் குறித்த தனது முதல் குரலை கொடுத்தார். அதுமுதல் அவர் நேரடி அரசியலுக்கு எப்போது வருவார்