தமிழக மக்களுக்கு சமந்தாவின் மிகப்பெரிய சேவை

  • IndiaGlitz, [Tuesday,November 01 2016]

நடிகை சமந்தா சிறந்த நடிகையாக மட்டுமின்றி சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார் என்பதை அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளில் இருந்து பார்த்து வருகிறோம். குறிப்பாக உயிருக்கு ஆபத்தான நோய்களினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க கடந்த சில மாதங்களுக்கு முன் சமந்தா தொடங்கிய 'பிரத்யூஷா' என்ற அமைப்பு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த அமைப்பின் மூலம் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சமந்தாவின் 'பிரத்யூஷா' தற்போது இந்த அமைப்பை தமிழ்நாட்டிலும் விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையுடன் இந்த அமைப்பு கைகோர்த்துள்ளதாகவும், விரைவில் இந்த இரு அமைப்புகளின் உதவியால் தமிழகத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தரமான இலவச சிகிச்சை கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சமந்தாவின் இந்த அரிய முயற்சிக்கு திரையுலகினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் சமூக வலைத்தளங்கள் மூலம் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.