7 மாத குழந்தை முதல் 99 வயது முதியவர் வரை: கொரோனா நேரத்தில் சமந்தாவின் ஊக்கமளிக்கும் மெசேஜ்
- IndiaGlitz, [Sunday,May 16 2021]
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் கொரோனா என்றாலே அனைவருக்கும் நடுநடுங்க வைக்கும் அளவுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனாவால் பயந்து இருக்கும் பொதுமக்களுக்கு பாசிட்டிவ் எனர்ஜி ஏற்படும் வகையில் நடிகை சமந்தா பதிவு செய்திருக்கும் ஊக்கமளிக்கும் மெசேஜ் அனைவரையும் திருப்தி அடைய செய்துள்ளது
டேராடூன் என்ற பகுதியில் ஏழு மாத குழந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் மூன்றே நாட்களில் குணமாகியது குறித்தும், குஜராத் மாநிலத்தில் 99 வயது பெரியவர் முதிய பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நான்கே நாட்களில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமாகியது குறித்தும், அதேபோல் லக்னோவில் பகவதி பிரசாத் என்ற 90 வயது நபர் ஆக்சிஜன் லெவல் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மீண்டு வந்தது குறித்துமான செய்திகளை பதிவு செய்துள்ளார்
ஏழு மாத குழந்தை முதல் 99 வயது முதியவர் வரை கொரோனாவில் இருந்து குணமாகிய நிலையில் நாம் ஏன் குணமாக கூடாது என்ற எண்ணத்தை அனைவர் மனதிலும் சமந்தாவின் இந்த பதிவு உணர்த்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#SamanthaAkkineni shares lovely recovery stories to spread some positivity during the pandemic. pic.twitter.com/SSfjROlvId
— Filmfare (@filmfare) May 15, 2021