நீங்கள் இல்லாமல் வாழ்க்கையே இல்லை… நடிகை சமந்தா கூறிய ஸ்பெஷல் நபர் யார் தெரியுமா?
- IndiaGlitz, [Monday,February 21 2022]
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை சமந்தா சமீபகாலகமாக சமூகவலைத் தளங்களில் ஆக்டிவாகச் செயல்படுவதும் இவர் பதிவிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுவருவதும் நமக்குத் தெரிந்ததே. அந்த வகையில் தற்போது மேலும் ஒரு உருக்கமான பதிவை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
விவாகரத்து அறிவிப்புக்குப் பிறகு கோவில் மற்றும் இயற்கையான சுற்றுலா தளங்களுக்குச் செல்லும் நடிகை சமந்தா தனது நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிட்டு வருகிறார். இதுகுறித்த புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் வைரலாகின. அந்த வகையில் கேரளாவிலுள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சென்ற அவர் தொடர்ந்து அலெப்பி கடற்கரையில் அமர்ந்தவாறு சூரிய அஸ்தமனத்தை ரசிக்கிறார். கூடேவே அவருடைய நெருங்கிய தோழி ஒருவரும் அருகிலேயே அமர்ந்துள்ளார்.
ரம்மியமான கடற்கரை, சூரிய அஸ்தமனம் என்று மாலைபொழுதை ரசித்த நடிகை சமந்தா பின்பு ஓய்வறையில் இனிப்பு மற்றும் சுகமான தூக்கம் எனக் குதூகலமான இன்ஸ்டா ஸ்டோரியையும் பதிவிட்டுள்ளார். மேலும் இந்தப் பதிவில் நீங்கள் இல்லாமல் வாழ்க்கை என்ற விஷயத்தை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார். நண்பர்களைக் குறித்து நடிகை சமந்தா கூறிய இந்த வார்த்தை தற்போது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் “காத்துவாக்குல ரெண்டு காதல்“ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நடிகை சமந்தா தொடர்ந்து பான் இந்தியா திரைப்படமான “சாகுந்தலா“ இதையடுத்து தெலுங்கு திரைப்படமான “யாசோதா“, அதேபோல “தி ஃபேமிலிமேன்“ வெப் சீரிஸ் இயக்குநர்களின் அடுத்த வெப் சீரிஸிலும் இவர் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.