'மார்வெல்' படத்தில் விஜய்யுடன் இவர்கள் 2 பேரும் நடிக்கலாம்: சமந்தா

  • IndiaGlitz, [Sunday,November 05 2023]

’மார்வெல்’ படத்தில் உள்ள கேரக்டர்களுக்கு இந்திய நடிகர்கள் யார் யார் பொருத்தமாக இருப்பார் என்ற கேள்விக்கு விஜய்யுடன் இரண்டு பிரபலங்களை நடிக்கலாம் என நடிகை சமந்தா கூறியுள்ளார்.

ஹாலிவுட் திரைப்படமான ’தி மார்வெல்’ என்ற படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இந்தியாவில் வெளியாக உள்ள இந்த படத்தின் தெலுங்கு பதிப்பில் ஒரு முக்கிய கேரக்டருக்கு நடிகை சமந்தா டப்பிங் பேசி உள்ளார்.

இதனை அடுத்து ஹைதராபாத்தில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா, ‘கேப்டன் மார்வெல் தனக்கு மிகவும் பிடித்த கேரக்டர் என்றும்

இந்த படத்தில் உள்ள மூன்று சக்தி வாய்ந்த சூப்பர் ஹீரோக்கள் தீமைக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் ’மார்வல்’ படத்தில் உள்ள மூன்று கேரக்டருக்கு எந்த இந்திய நடிகர்கள் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கேட்கப்பட்டதற்கு விஜய், பிரியங்கா சோப்ரா மற்றும் அல்லு அர்ஜுன் என சமந்தா பதிலளித்தார். அவரது இந்த பதில் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

அரைகுறை ஆடையுடன் ஆடுவது தான் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியா? தமிழ் நடிகர் ஆவேசம்..!

கடந்த சில மாதங்களாக ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற நிகழ்ச்சி சென்னை உள்பட பல பெரு நகரங்களில் நடைபெற்று வருகிறது என்பதும் இதில் பல இளைஞர்கள் சாலையில் நின்று கொண்டாட்டத்தில்

எல்லாரையும் பேட்டி கொடுத்து கேவலமா பேசுவான்: பிரதீப் குறித்து பூர்ணிமா குரூப்..!

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப்பை அனைவரும் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றிவிட்ட நிலையில் பிரதிப் போன சந்தோஷத்தை  பூர்ணிமா, மாயா உள்பட பெண்கள் குரூப் கொண்டாடி வருகிறது.

அண்டை மாநிலத்தில் அதிக வசூல் செய்த 'லியோ': அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலையும் வாரி குவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். தமிழ்நாடு உள்பட உலகம் முழுவதும் இந்த

தப்பு யார் செஞ்சாலும் தட்டி கேட்கணும்: ஜாமீனில் வெளிவந்த ரஞ்சனா நாச்சியார் பேட்டி..!

பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்த மாணவர்களை அடித்ததாக நடிகை ரஞ்சனா நாச்சியார் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் நேற்று மாலை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

'D50' படத்தை அடுத்து மீண்டும் ஒரு படம் இயக்கும் தனுஷ்? ஹீரோ யார் தெரியுமா?

தனுஷ் நடித்து இயக்கி வரும் 'D50' என்ற படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்று