எப்போது வேண்டுமானாலும் தாயாகலாம்: சமந்தாவின் பேட்டி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு பெண் எப்போது வேண்டுமானாலும் தாயாகலாம் என்றும், ஒரு பெண் தாயாவது அழகான அனுபவம் என்றும் சமீபத்தில் நடிகை சமந்தா பேட்டி அளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து, 2021 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இதன் பின்னர், நாக சைதன்யாவுக்கு மறு திருமணம் நடந்து விட்ட நிலையில், சமந்தா இன்னும் மறு திருமணம் பற்றி யோசிக்காமல் உள்ளார்.
இந்நிலையில், சமந்தா நடித்த ’சிட்டாடல்’ என்ற வெப் தொடரை அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ள நிலையில் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 1992 மற்றும் 2000 என காட்சிகள் மாறி மாறி வருவதும், சமந்தாவின் அதிரடி ஆக்சன் காட்சிகள் அற்புதமாக இருப்பதாக இந்த தொடரை பார்த்தவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், ’சிட்டாடல்’ தொடரின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா, கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தபோது, "அம்மாவாக வேண்டும் என்ற கனவு தனக்கு இப்போதும் இருப்பதாகவும், ஒரு பெண் தாயாவது ஒரு அழகான அனுபவம் என்றும், அதை நான் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்" என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்கள் வயதைப் பற்றி கவலைப்படுகிறார்கள் என்றும், "என்னைப் பொருத்தவரை குழந்தை பெற்றெடுக்க வயது ஒரு தடை இல்லை, எப்பொழுதும், எப்போது வேண்டுமானாலும் ஒரு பெண் தாயாகலாம்" என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments