தெலுங்கு திரையுலகில் பாலியல் தொல்லை: நடிகை சமந்தாவின் திடுக்கிடும் பதிவு..!
- IndiaGlitz, [Saturday,August 31 2024]
மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் மலையாள திரை உலகின் முக்கிய நட்சத்திரங்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் தெலுங்கு திரையுலகிலும் பாலியல் வன்கொடுமை இருப்பதாகவும் அது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் நடிகை சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் WCC என்ற அமைப்பின் செயல்பாடுகளை வரவேற்பதாக கூறிய சமந்தா கடந்த 2019 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் வாய்ஸ் ஆப் வுமன் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டதாகவும், கேரளா போலவே பாலியல் சீண்டல்கள் குறித்து இந்த அமைப்பின் அறிக்கை உருவாகி இருப்பதாகவும், அந்த அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் சமந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த அறிக்கை வெளியானால் தான் தெலுங்கு திரை உலகில் பாதுகாப்பான பணியிடங்களை உருவாக்க முடியும் என்றும் அரசு இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமந்தா குறிப்பிட்டுள்ளார். சமந்தாவின் இந்த கோரிக்கை நிச்சயம் தெலுங்கு திரை உலகில் புயலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே தமிழ் திரை உலகில் உள்ள பாலியல் வன்கொடுமை சீண்டல்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று சில நடிகைகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் சமந்தாவின் இந்த கோரிக்கையால் தென்னிந்திய அளவில் புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.