ஏழை மக்களுக்கு உதவ சென்னையில் காய்கறி விற்ற சமந்தா
Send us your feedback to audioarticles@vaarta.com
திருமணத்திற்கு பின்னரும் நடிகை சமந்தா நடித்து வரும் அனைத்து படங்களும் வெற்றிப்படங்களாக இருந்து வரும் நிலையில் சமீபத்தில் 'இரும்புத்திரை' படத்தின் 100வது நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்தார்.
இந்த விழாவில் கலந்து கொண்ட பின்னர் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள ஒரு காய்கரி கடையில் உட்கார்ந்து நடிகை சமந்தா காய்கறி விற்றார். இந்த செய்தி அந்த பகுதியில் காட்டுத்தீயாக பரவியதால் சமந்தா கையினால் காய்கறியை வாங்க கூட்டம் அலைமோதியது. இந்த காயகறி விற்கும் பணத்தை அவர் ஏழை எளிய மக்களுக்கு கொடுக்கவிருப்பதாக செய்திகள் பரவியதால் சமந்தாவிடம் அதிக விலை கொடுத்து மக்கள் காய்கறி வாங்கி சென்றனர்.
சமந்தா காய்கறிகளை விற்றதால் ஒருசில நிமிடங்களில் அந்த கடையில் உள்ள அனைத்து காய்கறிகளும் விற்றுத்தீர்ந்தன. இதில் வசூலான தொகை முழுவதையும் சமந்தா ஏழை எளிய மக்களின் நலனிற்கு வழங்கியுள்ளார். ஏற்கனவே நடிகை சமந்தா 'பிரதியூஷா' என்ற அமைப்பின்மூலம் இதயநோய் பாதித்த பலருக்கு அறுவை சிகிச்சை செய்ய உதவி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமந்தா நடித்த 'சீமராஜா' மற்றும் 'யூடர்ன்' ஆகிய படங்கள் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments