பட வாய்ப்புக்காக படுக்கை குறித்து கருத்து கூறிய சமந்தா

  • IndiaGlitz, [Sunday,May 06 2018]

திரையுலகில் பட வாய்ப்புகாக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் விவகாரம் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை இருப்பதாக அவ்வப்போது எழுந்து வரும் புகார்களின் மூலம் தெரியவருகிறது. குறிப்பாக சமீபத்தில் இதுகுறித்து நடிகை ஸ்ரீரெட்டி கிளப்பிய புயல் இன்னும் தெலுங்கு திரையுலகை பரபரப்பில் வைத்துள்ளது.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் இதுகுறித்து தனது கருத்தை நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். திரையுலகில் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் ஒருசில சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. நான் சினிமாத்துறையில் எட்டு வருடங்கள் இருந்துள்ளேன். அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒருசில கருப்பு ஆடுகளால் சிலசமயம் பெண்கள் பாதிக்கப்படுவதுண்டு. அந்த கருப்பு ஆடுகளை இனம்கண்டு ஒதுக்கிவிட்டால் சினிமாத்துறையை விட ஒரு நல்ல துறை இருக்க முடியாது. ஆனால் அதே நேரத்தில் சினிமாவில் நல்ல உள்ளங்கொண்ட பலரை நான் பார்த்துள்ளேன் என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.

மேலும் சமீபத்தில் நாட்டில் நடைபெற்று வரும் குழந்தைகள் மீதான பாலியல் வன்புணர்வு குறித்து கருத்து கூறிய சமந்தா, 'பாலியல் குற்றவாளிகளை குறிப்பாக குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்யும் குற்றவாளிகளை அரசு தூக்கிலிட வேண்டும். பல நாடுகளில் கற்பழிப்புக்கு கடுமையான தண்டனை வழங்கி வருகின்றனர். அதுபோல் நம் நாட்டிலும் தண்டனைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சமந்தா கூறியுள்ளார்,.

More News

3 பக்க தமிழ் வசனத்தை ஒரே டேக்கில் ஓகே செய்த விஜய்

சமீபத்தில் வெளியான 'அர்ஜூன் ரெட்டி' படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா, தமிழில் இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கி வரும் 'நோட்டா' என்ற படத்தில் நடித்து வருகிறார்

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் ஹன்சிகா

இதுவரை ஜாலியான, பொழுதுபோக்கு படங்களில் நடித்து வந்த நடிகை ஹன்சிகா, முதன்முறையாக சவாலான கேரக்டரை ஏற்று நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளாஅர். 

முடிவுக்கு வந்த நிவேதாவின் பிகினி குழப்பம்

நடிகை நிவேத பேத்ராஜ், ஜெயம் ரவியுடன் நடித்த 'டிக் டிக் டிக்' படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் மாதம் 22ஆம் தேதி என்று வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்

என்ன தைரியம் இருந்த என்னை பார்த்து: பிரகாஷ்ராஜ் கோபம்

சமீபத்தில் பத்திரிகையாளர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்த விவாத நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தீபாவின் திடுக் கேள்வி

தீபா கடந்த சில மாதங்களாக தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது நீட் தேர்வு மையம் விவகாரம் குறித்து ஒரு திடுக் கேள்வியை கேட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.