சிகிச்சைக்காக ரூ.25 கோடி கடன் வாங்கினேனா? நெட்டிசன்களை விளாசும் சமந்தா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்கள் மற்றும் ஒரு சில இணையதளங்களில் சமந்தா தனது மயோசிட்டிஸ் நோய் சிகிச்சைக்காக பிரபல நடிகர் ஒருவரிடம் 25 கோடி ரூபாய் கடன் வாங்கியதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
ஆயிரக்கணக்கான கோடி சொத்து உள்ள நாகார்ஜுனா குடும்பத்தில் மருமகளாக சென்ற சமந்தா, தனது கணவரை பிரியும் போது ஒரு பைசா கூட ஜீவனாம்சம் வாங்காமல் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவருடைய சொத்து மதிப்பு 100 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரபல நடிகர் ஒருவரிடம் ரூபாய் 25 கோடி ரூபாய் சமந்தா கடன் வாங்கி உள்ளார் என்பது முழுக்க முழுக்க வதந்தி என்றே கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் இது குறித்து சமந்தா தனது சமூக வலைதளத்தில் விளக்கம் தெரிவித்துள்ளார்
மயோசிட்டிஸ் சிகிச்சைக்கு ரூ.25 கோடி கடன் வாங்கினேனா? எனக்கு என்று ஒரு தொழில் இருப்பதால் என்னால் என்னை எளிதாக கவனித்துக் கொள்ள முடியும். இது போன்ற தகவல்களை வெளியிடும் போது தயவு செய்து பொறுப்பாக இருங்கள்..
மயோசிட்டிஸ் என்பது ஆயிரக்கணக்கானோர் அவதிப்படும் ஒரு நோய். இந்த நோய்க்கு இவ்வளவு பெரிய தொகை சிகிச்சைக்காக தேவைப்படாது என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த விளக்கத்தை அடுத்து இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com