செர்பியாவில் மியூசிக் வைப் செய்த நடிகை சமந்தா… வைரலாகும் அழகிய புகைப்படங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிட்டாடல் வெப் சீரிஸ் படப்பிடிப்புக்காக நடிகை சமந்தா மற்றும் அவரது குழுவினர் செர்பியா நாட்டிற்குச் சென்றிருந்த நிலையில் தற்போது அங்குள்ள பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துள்ளனர். அதுகுறித்த புகைப்படங்களை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை பதிவிட்டு, பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை சமந்தா தற்போது உலகம் முழுவதும் பிரபலமான ‘சிட்டாடல்’ வெப் சீரிஸ்-இன் இந்திய பதிப்பில் நடித்து வருகிறார். ஹாலிவுட்டில் நடிகை பிரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகிய ‘சிட்டாடல்’ வெப் சீரிஸ்க்கு முந்தைய கதையில்தான் நடிகை சமந்தா தற்போது நடித்து வருகிறார்.
இதை கதையை ஏற்கனவே சமந்தா நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாக சர்ச்சையை கிளப்பிய ‘தி ஃபேமிலி மேன்‘ வெப் சீரிஸ் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே சகோதரர்கள் இயக்கி வருகின்றனர். இந்நிலையில் சிட்டாடல் வெப் சீரிஸ் படப்பிடிப்பிற்காக நடிகை சமந்தா, நடிகர் வருண் தவாண் ஆகியோர் அடங்கிய குழு, செர்பியாவிற்கு சென்றிருந்த நிலையில் அந்த தொடரின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து நடிகை சமந்தா உள்ளிட்ட குழுவினர் செர்பியாவிலுள்ள பெல்கிரேட் எனும் இடத்தை சுற்றிப் பார்த்துள்ளனர். அப்போது கோல்ட் காஃபி, அமைதியான மியூசிக் என்று நடிகை சமந்தா தனது நேரத்தை செலவிட்டுள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது. ஏற்கனவே அந்நாட்டு சர்ச்சில் நின்றவாறு நடிகை சமந்தா வேண்டுதல் செய்திருந்தார். அதுகுறித்து அவர் பதிவிட்டு இருந்த தகவல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது.
மேலும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு செர்பியா நாட்டிற்கு பயணம் செய்திருந்தபோது சிட்டாடல் குழுவினர் அவர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. அமேசான் பிரைம் வீடியோவிற்காக உருவாகி வரும் சிட்டாடல் வெப் சீரிஸின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் நடிகை சமந்தா விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ‘குஷி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments