'ஜானு'வுடன் திரை உலக வாழ்வை முடித்துக் கொள்ள சமந்தா முடிவு? அதிர்ச்சியில் ரசிகர்கள் 

  • IndiaGlitz, [Saturday,February 08 2020]

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ படத்தின் தெலுங்கு ரீமேக் திரைப்படமான ‘ஜானு’ என்ற திரைப்படம் நேற்று வெளியானது. த்ரிஷா வேடத்தில் சமந்தா நடித்திருந்த இந்தப் படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ஊடகங்கள் மற்றும் விமர்சகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். ’96’ படத்தில் நடித்த த்ரிஷாவுக்கு இணையாக சமந்தாவின் நடிப்பு இருப்பதாக இருவரது நடிப்பை விமர்சகர்கள் ஒப்பிட்டு வருகின்றனர்

இந்த நிலையில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே திரையுலகில் இருந்து விலக முடிவு செய்ததாகவும் அதற்கு முன்னர் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் வகையில் ஒரு படத்தில் நடிக்க வேண்டுமென்ற என்று முடிவு செய்து ’ஜானு’ படத்தை தேர்வு செய்ததாகவும் தற்போது இதுதான் தான் சினிமாவில் இருந்து விலக சரியான நேரம் என்றும் அவர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

சமந்தாவின் இந்த முடிவு அவருடைய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. இருப்பினும் அவர் ஒரிரு வருடங்கள் கழித்து மீண்டும் சினிமாவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது