நயன்தாரா நடிக்க வேண்டிய படத்தில் சமந்தா.. பிரபல இயக்குனரின் அதிரடி மாற்றம்..!

  • IndiaGlitz, [Wednesday,June 12 2024]

கடந்த சில நாட்களுக்கு முன்னால் மம்முட்டி ஹீரோவாக நடிக்கும் படத்தில் நயன்தாரா நாயகி ஆக நடிக்க இருக்கிறார் என்றும் இந்த படத்தை கௌதம் மேனன் இயக்க இருப்பதாகவும் தமிழ் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி இந்த படத்தில் நயன்தாரா நடிக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக சமந்தா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகை சமந்தா ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் அதன் பிறகு ’நீதானே என் பொன் வசந்தம்’ என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் சமந்தா நடிக்க இருக்கிறார் என்பதும் அதுவும் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அதிரடி த்ரில் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஜூன் 15ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் மம்முட்டி 20 ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே மம்மூட்டி மற்றும் சமந்தா ஆகிய இருவரும் ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

'குக் வித் கோமாளி' பிரபலத்தை காதலிக்கும் அம்மு அபிராமி? உறுதி செய்த வீடியோ..!

'ராட்சசன்' 'அசுரன்' உள்ளிட்ட படங்களிலும்' குக் வித் கோமாளி' நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட நடிகை அம்மு அபிராமி, குக் வித் கோமாளி பிரபலத்தை காதலித்து வருவதாக

சுந்தர் சி அடுத்த படத்தின் ஹீரோ வடிவேலுவா? கலக்க போகும் காமெடி..!

சுந்தர் சி இயக்கத்தில் உருவான 'அரண்மனை 4 ' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்தது.

சொந்த வீடு வாங்க, பித்ரு தோஷம் நீங்க எளிய பரிகாரம் !

பிரபல ஜோதிடர் நற்பவி நம்பிராஜன் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி, பித்ரு தோஷம் மற்றும் அதன் தீர்வைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கிறது.

பிரமாண்டமாக நடந்தது அர்ஜுன் மகள் திருமணம்.. திரையுலகினர் வாழ்த்து..!

ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் நேற்று அதாவது ஜூன் 10ஆம் தேதி சென்னையில்

பெங்களூரு இளைஞர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: பிரபல நடிகர் அதிரடி கைது..!

பெங்களூரில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல கன்னட நடிகர் தர்ஷன் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.