அதீத அன்பினால் வந்த காதல் இது: சமந்தா வெளியிட்ட வீடியோ

அதீத அன்பினால் வந்த காதல் இது என்று கூறி நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை சமந்தா தற்போது நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படங்களில் ஒன்று ’குஷி’ என்பதும் விஜய்தேவரகொண்டா ஜோடியாக இந்த படத்தில் சமந்தா நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த படம் வரும் டிசம்பர் 23-ஆம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தில் விஜய்தேவரகொண்டா உடன் ரொமான்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்ட போது எடுத்த வீடியோவை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .

இந்த வீடியோவில் ’அதீத அன்பினால் வரும் காதல் இது என்றும் இந்த காதல் திரைப்படத்தை வரும் கிறிஸ்மஸ் புத்தாண்டில் பெரிய திரையில் ரிலீஸ் செய்ய உள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

ஷிவா நிர்வானா என்பவரின் இயக்கத்தில் மைத்திரி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது என்பதும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'மன்னன்' 'படையப்பா' படங்களில் தவறான கருத்துகள்: ஆர்ஜே பாலாஜி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை தனக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றாலும் அவர் நடித்த 'மன்னன்' 'படையப்பா' படங்களில் தவறான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஆர்ஜே பாலாஜி கூறியுள்ளார்.

ரஜினியை கண்கலங்க வைத்த சிவகார்த்திகேயன்: அப்படி என்ன செய்தார்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சிவகார்த்திகேயன் கண்கலங்க வைத்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது .

'தளபதி 66' திரைப்படத்தில் இணையும் இன்னொரு பிரபலம்: யாராக இருக்கும்?

தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் 'தளபதி 66'  திரைப்படத்தில் ஏற்கனவே ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம் இருக்கும் நிலையில் மேலும் ஒரு பிரபலம் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

படுக்கையறை காட்சி குறித்து கேள்வி கேட்ட ரசிகருக்கு பதிலடி கொடுத்த மாளவிகா மோகனன்!

மாளவிகா மோகனன் நடித்த படுக்கையறை காட்சி குறித்து கேள்வி கேட்ட ரசிகர் ஒருவருக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமீர்கானின் 'பிகே' பாணியில் ஒரு தமிழ்ப்படம்: முக்கிய வேடத்தில் யோகிபாபு!

அமீர்கான் நடித்த 'பிகே' பாணியில் ஒரு தமிழ் திரைப்படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் யோகிபாபு நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.