சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் நம்பர் ஒன் நடிகை

  • IndiaGlitz, [Friday,August 19 2016]

கோலிவுட் திரையுலகில் அழுத்தமாகவும் ஆழமாகவும் காலூன்றியுள்ள சிவகார்த்திகேயன் இன்னும் ஒருசில வருடங்களில் இளையதலைமுறை நடிகர்களில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. முதலில் சிவகார்த்திகேயனுடன் நடிக்க ஒருசில முன்னணி நடிகைகள் தயங்கியதுண்டு. ஆனால் அவருடைய வளர்ச்சியை பார்த்து தற்போது ஹன்சிகா, நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகளே ஜோடியாக நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேருகிறார் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி இடத்தை பிடித்துள்ள சமந்தா. ஆம், சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கவுள்ள படத்தின் நாயகியாக சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24ஏம் ஸ்டுடியோஸ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளது.
சிவகார்த்திகேயனின் 'ரெமோ' அக்டோபரில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தை அடுத்து அவர் மோகன்ராஜா படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

3 மாதத்தில் 3 படம். உற்சாகத்தில் விஜய்சேதுபதி ரசிகர்கள்

விஜய்சேதுபதி, தமன்னா நடிப்பில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கிய 'தர்மதுரை' திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது...

நல்ல சினிமாவை பொது மக்களுக்கு கொண்டு சேர்க்க ஒரு புது முயற்சி

சினிமா என்பது ஒரு மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சமாக இருந்தாலும், அந்த சினிமாவின் மூலம் சமுதாயத்தில் பல அதிர்வுகள் ஏற்பட்டு வருவதை பார்த்து வருகிறோம்...

சிவகார்த்திகேயனுடன் முதல்முறையாக இணையும் பிரபல காமெடி நடிகர்

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'ரெமோ' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படம் வரும் அக்டோபர் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது...

செப்டம்பரில் கீர்த்திசுரேஷ் வீட்டில் டும்டும் மேளம்

கோலிவுட் திரையுலகில் மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இணைந்துவிட்ட நடிகை கீர்த்திசுரேஷ்...

அஜித்துக்கு கிடைத்த ஹாலிவுட் பட்டம்

அஜித்துக்கு பட்டம், பதவி, அடைமொழி ஆகியவற்றில் விருப்பம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே...