படுக்கையறை ரகசியங்களை தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்த நடிகை சமந்தா!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா, சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் லட்சுமி மஞ்சு எடுத்த பேட்டியின்போது படுக்கையறையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை மனம்விட்டு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
எனக்கும், நாகசைதன்யாவுக்கும் இடையே ஒன்று உள்ளது. அதுதான் தலையணை. நாக சைதன்யாவுக்கு தலையணை தான் முதல் மனைவி. நான் முத்தம் கொடுக்க வேண்டும் என்றால் கூட எங்களுக்கு இடையே தலையணை இருக்கும். இதற்கு மேல் என்னால் கூற முடியாது’ என்று கூறினார்.
மேலும் தனது கணவர் நாகசைதன்யாவுடன் ’ஏ மாய சேசாவே’ படத்தில் நடித்தபோது ஒரு மிகப்பெரிய ஸ்டாரின் மகனுடன் நடிக்கிறேன் என்ற உணர்வு இருந்தது. அப்பொழுது அவர் தனது கேரியர் பற்றி சீரியஸாக இருந்தார். அதே நேரத்தில் படம் ஒர்க்அவுட்டானாலும் சரி, ஆகாவிட்டாலும் ஓகே என்ற மனநிலையில் இருந்தார். ஆனால் தற்போது அவர் ரொம்ப மெச்சூராகிவிட்டார் என்று சமந்தா தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout