நடிகை சமந்தாவின் அடுத்த புரொஜக்ட்.. அட்டகாசமான டைட்டில் போஸ்டர்..!

  • IndiaGlitz, [Tuesday,March 19 2024]

நடிகை சமந்தா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக திரையுலகில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுத்த நிலையில் தற்போது மீண்டும் அவர் நடிக்க தொடங்கிவிட்டார் என்பதும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் சமந்தா நடித்து வரும் ’சிட்டாடல்’ என்ற வெப் தொடரின் டைட்டில் உடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வெப் தொடருக்கு ’சிட்டாடல் ஹனி ஃபனி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதை அடுத்து அட்டகாசமாக இருக்கும் இந்த டைட்டில் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

இந்த வெப் தொடரின் நாயகனாக வருண் தவான் நடிக்க, நாயகியாக சமந்தா நடித்து வரும் நிலையில் இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் துப்பாக்கியை கையில் வைத்திருக்கும் இந்த போஸ்டர் தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது

அமேசான் பிரைம் ஓடிடியில் நேரடியாக ஒளிபரப்பாக இருக்கும் இந்த தொடரை ராஜ் மற்றும் டிகே இயக்கியுள்ளனர் என்பதும் ஏற்கனவே இவர்கள் ’தி பேமிலி மேன் 2’ என்ற தொடரை இயக்கியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது