கையில் துப்பாக்கி, உடம்பெல்லாம் ரத்தம்.. சமந்தாவின் புதிய பட அறிவிப்பு.. டைட்டில் போஸ்டர் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை சமந்தா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்க இருக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா கடந்த 14 ஆண்டுகளாக நடித்து வருகிறார் என்பதும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கில் அவர் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் உடல்நல குறைவு காரணமாக சில மாதங்கள் ஓய்வு எடுத்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உடல்நிலை தேறி மீண்டும் நடிக்க வந்து உள்ளார் என்பதும் பாலிவுட்டில் ஒரு வெப் தொடரில் அவர் நடித்து வருகிறார் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது அவர் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ள நிலையில் அந்த படத்தின் டைட்டில் வீடியோ சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. சமந்தா நடிக்க இருக்கும் இந்த படத்தின் டைட்டில் ’பங்காரம்’ என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தை ட்ரலாலா மூவிஸ் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போஸ்டரில் நடிகை சமந்தா கையில் ஆவேசமாக துப்பாக்கி வைத்திருக்கும் நிலையில் அவரது உடலில் பல இடங்களில் ரத்தக்கறை இருப்பது போல் தெரிவதால் நிச்சயம் இது ஒரு அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tralala Moving Pictures wishing @Samanthaprabhu2 a very Happy Birthday with the motion poster of her next titled #Bangaram#HappyBirthdaySamantha#MaaIntiBangaram pic.twitter.com/bq1pGBNcuM
— Vamsi Kaka (@vamsikaka) April 28, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments