ஹங்கேரியில் தொழில்நுட்ப பணிகள்.. சமந்தாவின் அடுத்த படம் குறித்த ஆச்சரிய தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமந்தா நடித்த 'யசோதா’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்து முடித்துள்ள அடுத்த திரைப்படமான ’சாகுந்தலம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது
இந்த படம் கடந்த ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் பின்னர் தொழில்நுட்ப பணி தாமதம் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கப்பட்டது என்பது சமீபத்தில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 17 என அறிவிக்கப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த படத்தின் பின்னணி இசை பணிகள் தற்போது ஹங்கேரி நாட்டில் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவில் தற்போது ’சாகுந்தலம்’ படத்தின் பின்னணி இசை ஒலிப்பதிவு நடைபெற்று வருவதாகவும் இந்த பணிகள் விரைவில் முடிவடையும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில் 20க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் ’சாகுந்தலம்’ படத்தின் பின்னணி இசைக்காக பணிபுரிந்து வருகின்றனர்.
சமந்தா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் மோகன்பாபு, அதிதி பாலன், பிரகாஷ்ராஜ், கௌதமி, கபீர் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குணசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.
The grandeur gets grander..! #Shaakuntalam RR sessions with Symphony Orchestra Budapest, in Hungary 🎻🎼
— Sri Venkateswara Creations (@SVC_official) January 5, 2023
- https://t.co/YvZIkOlP32@Gunasekhar1 @Samanthaprabhu2 @ActorDevMohan #ManiSharma @neelima_guna @GunaaTeamworks @SVC_official @tipsofficial #MythologyforMilennials pic.twitter.com/ARkawRVA4f
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments