சமந்தாவின் அடுத்த படம்.. சூப்பர் அப்டேட் தந்த படக்குழு..!

  • IndiaGlitz, [Monday,August 07 2023]

நடிகை சமந்தா சில மாதங்களுக்கு நடிப்பிலிருந்து ஓய்வு எடுத்துக் கொண்டாலும் அவர் ஏற்கனவே நடித்து முடித்துள்ள ’குஷி’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் சமந்தா ரசிகர்கள் உற்சாகம் ஆகியுள்ளனர்.

விஜய் தேவரகொண்டா உடன் சமந்தா நடித்த திரைப்படம் ’குஷி’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.



இந்த நிலையில் ’குஷி’ திரைப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 9ஆம், தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2 நிமிடங்கள் 41 வினாடிகள் உள்ள இந்த ட்ரெய்லர் ரசிகர்களை திருப்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் உலகம் முழுவதும் இந்த திரைப்படம் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..



விஜய் தேவரகொண்டா, சமந்தா, ஜெயராம், வெண்ணிலா கிஷோர், லட்சுமி, ரோகினி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த திரைப்படத்தை ஷிவா நிர்வானா என்பவர் இயக்கி உள்ளார். ஹேஷம் அப்துல் வகாப் இசையில் முரளி ஒளிப்பதிவில் ப்ரவின்புடி படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.