சமந்தாவின் அடுத்த பட பூஜை: ஹீரோ யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை சமந்தா நடித்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் வரும் 28ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் அவர் ’யசோதா’ மற்றும் ’சாகுந்தலம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. ஷிவ் நிர்வணா என்பவர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளார். இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றதை அடுத்து இந்த பூஜை குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.
விஜய்தேவரகொண்டா மற்றும் சமந்தா ஆகியோர் ஏற்கனவே கீர்த்தி சுரேஷின் ’நடிகையர் திலகம்’ என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பதும், அந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை அல்லு அர்ஜூன் நடித்த ’புஷ்பா’ படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தினர் தயாரிக்க உள்ளனர். ’புஷ்பா’ படத்தில் ‘ஓ சொல்றியா மாமா’ என்ற சூப்பர்ஹிட் பாடலுக்கு நடனமாடிய சமந்தா, தற்போது அந்நிறுவனத்தின் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
தமிழ் தெலுங்கு உட்பட பான் - இந்தியா திரைப்படமாக இந்த படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் ஆகியுள்ளன.
Doing poojas for Family films ??
— Vijay Deverakonda (@TheDeverakonda) April 21, 2022
❤️ @Samanthaprabhu2 - @ShivaNirvana - @HeshamAWMusic - @muraligdop & Your man in a film for the families, to get together and enjoy ???? pic.twitter.com/ayyyOYUmuz
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com