சமந்தாவின் அடுத்த படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

  • IndiaGlitz, [Monday,February 21 2022]

பிரபல நடிகை சமந்தா நடித்து வரும் படத்தின் அட்டகாசமாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

சமந்தா நடித்து வரும் படங்களில் ஒன்று ’சாகுந்தலம்’. மகாகவி காளிதாசர் எழுதிய சாகுந்தலம் என்ற புராணக் கதையின் அடிப்படையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் சாகுந்தலா கேரக்டரில் நடிகை சமந்தா நடித்து வருகிறார்.

மணிசர்மா இசையில் குணசேகர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் சாகுந்தலா கேரக்டரில் சமந்தா தேவதை போல் இருப்பதாக  ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமந்தா, அதிதி பாலன், பிரகாஷ்ராஜ், மோகன்பாபு, மதுபாலா, கபீர் சிங் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த இந்த படத்தை தில் ராஜூ பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.