close
Choose your channels

துபாய் சென்றாலும் பழக்கத்தை மாற்றாத சமந்தா: வைரல் புகைப்படம்!

Wednesday, April 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா துபாய்க்கு சுற்றுலா சென்ற போதிலும் அவர் தனது பழக்கத்தை மாற்ற வில்லை என்பதை நிரூபிக்கும் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை சமந்தா எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தினமும் ஒர்க்கவுட் செய்வதை நிறுத்துவது இல்லை என்பதும் அவர் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகும் என்பதும் தெரிந்ததே.

இந்நிலையில் சமந்தா சமீபத்தில் சுற்றுலாவுக்காக துபாய் சென்றார். துபாய் சென்ற போதிலும் அவர் தனது ஒர்க்கவுட்டை அங்கும் தொடர்ந்து செய்து வருகிறார். துபாயில் சமந்தா தான் தங்கியிருக்கும் ஹோட்டலில் தரையில் உட்கார்ந்து யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் துபாய் சென்றாலும் நான் எனது உடற்பயிற்சியை நிறுத்த மாட்டேன் என்றும் என்னுடைய பயிற்சியாளரும் இங்கே என்னுடன் தான் இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார. துபாயில் யோகா செய்யும் புகைப்படத்தை சமந்தா பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை சமந்தா, விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா உடன் நடித்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் வரும் 28ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் அவர் ‘ஷாகுந்தலம்’ மற்றும் ‘யசோதா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment