திருமணத்திற்கு முன் நாகசைதன்யா-சமந்தாவின் முக்கிய முடிவு

  • IndiaGlitz, [Tuesday,September 27 2016]

பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யா-நடிகை சமந்தாவின் திருமணம் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் திருமணத்திற்கு முன்னர் இருவரும் சூப்பர் ஹிட் படம் ஒன்றின் ரீமேக்கில் இணைந்து நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பாலிவுட்டில் அர்ஜூன்கபூர், அலியாபட் நடித்த வெற்றிப்படமான '2 States' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாகசைதன்யா-சமந்தா காதல் ஜோடி நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை Venkat Kuchem என்ற இயக்குனர் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒரிஜினல் '2 States' படத்தில் பஞ்சாபி ஹீரோ, தமிழ் பெண்ணை காதலிப்பது போன்று கதை அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாகசைதன்யா தெலுங்கு காதலராகவும், சமந்தா மலையாள பெண்ணாகவும் நடித்தால் மிகப்பொருத்தமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் இருவரின் திருமணத்திற்கு முன்பே முடிக்கப்படும் என்றும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.