சமந்தா-நாகசைதன்யா திருமண தேதி அறிவிப்பு?

  • IndiaGlitz, [Monday,May 22 2017]

பிரபல நடிகை சமந்தாவுக்கும் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் இந்த ஆண்டுக்குள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது திருமண தேதி குறித்த தகவல் கசிந்துள்ளது
வரும் அக்டோபர் மாதம் 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை சமந்தா-நாகசைதன்யா திருமணம் நடைபெறவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்களது திருமணம் ஐதராபாத்தில் கலாச்சார முறைப்படி நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த முறையான அறிவிப்பை நாகார்ஜூனா விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமந்தா தற்போது விஜய்யுடன் 'தளபதி 61', விஷாலுடன் 'இரும்புத்திரை', சிவகார்த்திகேயனுடன் ஒரு படம், நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படம் போன்ற படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். வரும் அக்டோபர் மாதத்திற்குள் இந்த கமிட்மெண்ட்டுகளை சமந்தா முடித்துவிடுவார் என்றே கூறப்படுகிறது.