close
Choose your channels

கோவை வந்த சமந்தா யாரை சந்தித்தார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!

Monday, January 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா கோவை வந்து அங்கிருந்து ஈஷா யோகா மையத்திற்கு சென்று சத்குருவை சந்தித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் திருமணத்திற்கு பின்னரும் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இருந்து வருபவர் சமந்தா. இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நயன்தாராவுடன் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஒரு வெப்தொடரிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் கோவை வந்த சமந்தா அங்கு ஈஷா யோகா மையத்திற்கு சென்று சத்குருவை சந்தித்துள்ளார். அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள சமந்தா அவரது அவருடனான சந்திப்பு குறித்து கூறியதாவது: ஆன்மீக செயல்முறையின் முழு முயற்சி என்பது நீங்கள் உங்களுக்குள் வரையப்பட்ட எல்லைகளை உடைத்து, ஒரு மகத்தான அனுபவத்தை அனுபவிப்பதே ஆகும். உங்கள் அறியாமையின் விளைவாக, நீங்கள் உருவாக்கிய வரையறுக்கப்பட்ட அடையாளத்திலிருந்து உங்களை நீங்களே நீக்கி கொண்டு, ஒரு நல்ல படைப்பாளியாக நம்மை உருவாக்கி கொண்டு வாழ்வது தான் ஆன்மீகத்தின் நோக்கம். இதுவொரு முற்றிலும் ஆனந்தமான மற்றும் எல்லையற்ற பொறுப்பு.

வெறும் அறிவு மட்டும் ஒரு சாதனை அல்ல. உங்கள் புலன்கள் அனைத்தும் ஒரு வெளிப்புற தோற்றத்தை தருகின்றன, ஆனால் நீங்கள் ஒருபோதும் உண்மையான வெளிப்புறத்தை அனுபவித்து இருக்க மாட்டீர்கள். நீங்கள் அனுபவிக்கும் அனைத்தும் உங்களுக்குள் இருப்பதை நீங்கள் உணரும்போது நீங்கள் உண்மையாகவே அறிவொளியை பெற்றுள்ளீர்கள் என்று அர்த்தம்’ என்று கூறியுள்ளார்.

சத்குருவின் அருகில் சமந்தா உட்கார்ந்திருக்கும் இந்த புகைப்படமும் அவரது கழுத்தில் உள்ள ருத்ராட்ச மாலையையும் பார்க்கும்போது அவர் ஒரு ஆன்மீகவாதியாகவே மாறிவிட்டது போல் இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment