சமந்தா வெயிட்டே 50 கிலோ தான்.. ஆனால் எவ்வளவு எடையை தூக்கினார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை சமந்தாவின் உடல் எடை 50 கிலோ என்று இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர் 42 கிலோ எடையை தூக்கி உள்ளதாக வெளிவந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகை சமந்தா சமீபத்தில் உடல்நல குறைவு ஏற்பட்டாலும் அதன் பிறகு அதில் இருந்து மீண்டு வந்து தற்போது உடல் நிலையை பாதுகாப்பாக வைத்துள்ளார். அடிக்கடி அவர் வொர்க்அவுட் செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் அவரது இன்ஸ்டாகிராமில் வைரலாகும் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஜிம் ட்ரைனர் உதவியுடன் 42 கிலோ எடையை தூக்கி சாதனை செய்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சமந்தாவின் மொத்த உடல் எடை 50 கிலோ என்று கூறப்ப்டும் நிலையில் கிட்டத்தட்ட அவர் உடல் எடைக்கு சமமான அளவுக்கு கைகளால் இந்த வெயிட்டை அவர் தூக்கி இருக்கும் வீடியோவை பார்த்து ரசிகர்கள் பாசிட்டிவ் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை சமந்தா தற்போது ’சிட்டாடல்’ என்ற வெப் தொடரில் நடித்து வரும் நிலையில் அவர் தமிழ், தெலுங்கு படங்களிலும் நடிக்க விரைவில் ஒப்பந்தமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com