வேற லெவலில் சமந்தாவின் உடல்நிலை.. ரித்திகா சிங்கிற்கு போட்டியா?
- IndiaGlitz, [Thursday,February 22 2024]
நடிகை சமந்தா வேற லெவலில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா கடந்த சில மாதங்களாக உடல் நல கோளாறு காரணமாக திரையுலகில் இருந்து ஓய்வு எடுத்தார். அன்பின் தகுந்த சிகிச்சை மற்றும் உடற்பயிற்சி, யோகா ஆகியவை காரணமாக தற்போது முழு உடல் தகுதி பெற்றுள்ள சமந்தா மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில் சற்று முன் தனது சமூக வலைதளத்தில் சமந்தா தனது உடல் எடை மற்றும் உடல் தகுதிகள் குறித்த புகைப்படங்களை வெளியிட்டு வேற லெவலில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கடல் மற்றும் பசுமையான சுற்றுப்புறங்களில் பின்னணியில் அவர் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் மற்றும் ஒரு அழகான குளம் அமைந்த புகைப்படம், காலையில் பறவைகள் மற்றும் அமைதியான தருணங்கள் உள்ள புகைப்படம் ஆகியவற்றை அவர் பகிர்ந்து உள்ளார்.
மேலும் ஒரு புகைப்படத்தில் அவரது உடல் எடை 50.1 கிலோ என்றும், மற்றும் சில விவரங்களையும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மேலும் ஒரு புகைப்படத்தில் அவரது உடல் எடை 50.1 கிலோ என்றும், மற்றும் சில விவரங்களையும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் உங்களை பார்த்தால் ரித்திகா சிங்கிற்கு போட்டியாக தயாராவது போல் உள்ளது என கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.
ஏற்கனவே சமந்தா தனது ஹெல்த் போட்காஸ்ட் மூலம் உடல் நலம் குறித்த குறிப்புகளை தெரிவித்து வருகிறார் என்பதும் அவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது என்பதும் தெரிந்தது.