வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் சமந்தா.. நோயில் இருந்து மீண்டுவிட்டாரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில வாரங்களாக மயோசிடிஸ் என்னும் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகை சமந்தா தற்போது வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா அரியவகை நோயான மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இதனை அடுத்து அந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறி கூறியிருந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை தேறி வருவதாகவும் விரைவில் அவர் இந்த நோயிலிருந்து முழுமையாக மீண்டு படப்பிடிப்பில் விரைவில் கலந்து கொள்வார் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவில் அவர் புல்-அப்ஸ் வொர்க்-அவுட் செய்யும் காட்சிகள் உள்ளன. மேலும் இந்த வீடியோவில் அவர் மெலிந்து மிகவும் ஸ்லிம்மாக காணப்படுவதை அடுத்து அவர் குறிப்பிட்ட டயட்டில் இருப்பதாகவும் தெரிகிறது.
இதுகுறித்து சமந்தா கூறியபோது, ‘நான் இப்போது ஆட்டோ இம்யூன் டயட் என்ற டயட்டில் இருக்கின்றேன். இந்த டயட் எனக்குக் கற்றுக் கொடுத்தது என்னவெனில் வலிமை என்பது நீங்கள் சாப்பிடுவது அல்ல.. நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள் என்பதுதான்’ என தெரிவித்துள்ளார். சமந்தாவின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மீண்டும் பழைய உற்சாகமான சமந்தாவாக மாறிவிட்டார், வாழ்த்துக்கள் என்று கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் சமந்தா நடித்த ' ‘ஷாகுந்தலம்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். சமந்தா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் தேவ் மோகன், பிரகாஷ்ராஜ், மதுபாலா, கெளதமி, அதிதிபாலன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments