பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு: யாரை சொல்கிறார் சமந்தா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்ற அர்த்தத்தில் சமந்தா ஒரு டுவிட்டை பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை சமந்தா தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளார் என்பதும் அவரது திரைப்படங்கள் மிகப் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்று தெரிந்ததே
இந்த நிலையில் நடிகை சமந்தா தன்னைப் பற்றிய நெகட்டிவ் விமர்சனங்களை கண்டு கொள்வதில்லை என்பதும், ஒருசில விமர்சனங்களுக்கு மட்டும் அவர் அமைதியுடன் விளக்கம் அளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்ற கருத்தில் ஒரு ட்வீட்டை அவர் பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில் சமந்தா கூறியிருப்பதாவது:
எனது மெளனம் மற்றும் அறியாமையை யாரும் தவறாக நினைத்துவிட கூடாது. எனது அமைதி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. எனது கருணையை யாரும் எனது பலவீனமாக நினைத்து விடக்கூடாது. கருணையும் ஒருநாள் காலாவதி ஆகும்’ என்று கூறியுள்ளார். இந்த டுவிட்டை சமந்தா யாருக்காக பதிவு செய்துள்ளார் என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
Kindness can have an expiry date ☺️#JustSaying https://t.co/UDc40uaLpv
— Samantha (@Samanthaprabhu2) April 22, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments