'10 எண்றதுக்குள்ள' படப்பிடிப்பு முடிந்தது. செல்பியுடன் பிரிந்த சமந்தா
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வந்த '10 எண்றதுக்குள்ள' படத்தின் ராஜஸ்தான் படப்பிடிப்பை முடிந்துவிட்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை வந்த படக்குழுவினர் ஒருசில விடுபட்ட காட்சிகளின் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு முடிவடைந்தது குறித்து இந்த படத்தின் ஹீரோயின் சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'கடைசி நாள் படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழுவினர்களை விட்டு பிரியும்போது உணர்ச்சிகரமாக இருந்தது. இந்த டீமுடன் பணிசெய்தது எனக்கு பல அருமையான அனுபவங்களை கொடுத்தது. இந்த படத்தை நான் மிகவும் எதிர்பார்க்கின்றேன்' என்று கூறியுள்ளார். மேலும் படக்குழுவினர் அனைவருடனும் விக்ரம் மற்றும் சமந்தா இணைந்து செல்பி புகைப்படமும் எடுத்து கொண்டு மகிழ்ச்சியுடன் பிரிந்ததாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் இன்னும் சில ஆட்கள் ஆரம்பிக்கப்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 21 என தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ் அறிவித்துவிட்டதால் அதற்கு முன்னர் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
விக்ரம், சமந்தா, பசுபதி, ஜாக்கி ஷெரா, மனோபாலா மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தில் நடிகை சார்மி ஒரே ஒரு பாடலுக்கு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். டி.இமான் மற்றும் அனூப் ஆகியோர் இசையமைத்துள்ள நிலையில் இந்த படத்தை 'கோலிசோடா' பட இயக்குனர் விஜய் மில்டன் இயக்கியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com