சமந்தா மடியில் இடம்பிடித்தது குறித்து நெட்டிசன்களின் கமெண்ட்ஸ்!

  • IndiaGlitz, [Tuesday,March 01 2022]

சமந்தா மடியில் இடம் பிடித்த செல்லப்பிராணிகள் குறித்து நெட்டிசன்கள் பதிவு செய்த சுவாரஸ்யமான கமெண்ட்ஸ்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, சமூக வலைதளங்களில் பிரபலம் என்பதும் குறிப்பாக அவரது இன்ஸ்டாகிராமில் மட்டும் 22 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் தெரிந்ததே. நடிகை சமந்தா பதிவு செய்யும் ஒவ்வொரு புகைப்படமும் லட்சக்கணக்கான லைக்ஸ்களை குவிக்கும் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சமந்தா கிளாமர் உடையில் உட்கார்ந்திருக்கும் ஒரு புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவாகியுள்ளது. அதில் அவரது மடியில் ஒரு கருப்பு செல்ல நாய்க்குட்டி உட்கார்ந்திருப்பதையும் காண முடிகிறது. இதனையடுத்து ‘கொடுத்து வைத்த செல்லப்பிராணிகள்’ என்பது உள்பட நெட்டிசன்கள் பல சுவாரஸ்யமான கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படத்தை நடிகை சமந்தா பதிவு செய்து இரண்டு மணி நேரமே ஆகியுள்ள நிலையில் சுமார் பத்து லட்சம் லைக்ஸ் குவிந்துள்ளது.

இந்நிலையில் சமந்தா நடித்து முடித்துள்ள ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் ஏப்ரல் 18ஆம் தேதி ரிலீசாக உள்ளது என்பதும் அவர் நடித்து வரும் ’சாகுந்தலம்’ மற்றும் ’யசோதா’ படங்களின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.