ஆகஸ்ட் 1 முதல் சமந்தாவுக்கு புதிய காதலா? வைரலாகும் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Sunday,July 28 2024]

நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆகஸ்ட் 1 முதல் சவுண்ட் லைக் எ டேட் என்று குறிப்பிட்டுள்ள புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் ஆகஸ்ட் 1 முதல் அவருக்கு புதிய காதலா என்பது போன்ற பல கேள்விகளை ரசிகர்களை எழுப்பி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் பிரபலம் என்பதும் அவருக்கு 35 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கிறார்கள் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகும் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் நடிகை சமந்தா காரில் சென்று கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவு செய்து அதில் கையில் ஒரு சிலிப்பை காட்டி இருக்கிறார். அதில் Find Honey on 01/08 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்திற்கு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் டேட் செய்ய போகிறீர்களா? என்பது போன்ற கேள்விகளை பலர் எழுப்பி வருகின்றனர். ஆனால் உண்மையில் சமந்தா நடித்து வரும் ’சிட்டாடல்’ வெப் தொடர் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதை அறிவிப்பதற்காக தான் வித்தியாசமாக சமந்தா இந்த போஸ்டை பதிவு செய்துள்ள நிலையில் நெட்டிசன்கள் தங்களுடைய கற்பனை திறனை வளர்த்துக் கொள்ளும் வகையில் பல்வேறு கேள்விகளை இந்த பதிவுக்கு கமெண்ட் காக பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சுஜிதா வெளியிட்ட ஹோம் டூர் வீடியோவில் வேட்டை துப்பாக்கி.. லைசென்ஸ் இருக்குதா?

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் நடித்த சுஜிதா சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோவில் வேட்டை துப்பாக்கி இருந்ததை எடுத்து அந்த துப்பாக்கிக்கு லைசன்ஸ் இருக்கிறதா

சிவாஜி கணேசன், கமல்ஹாசன் பெற்ற உயரிய விருதை பெற்ற டாம் குரூஸ்.. ரசிகர்கள் வாழ்த்து..!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் உட்பட பல பிரபலங்களுக்கு கிடைத்த உயரிய விருது தற்போது பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் அவர்களுக்கும்

கமல் கைவிட்டாலும் தன்னம்பிக்கையை கைவிடாத சிம்பு.. 'STR48' படத்தின் சூப்பர் தகவல்..!

கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிப்பில் உருவாக இருந்த 'STR48' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த ஒரு வருடத்திற்கு மேல் நடந்த நிலையில் தற்போது திடீரென கமல்ஹாசன் இந்த படத்தின் தயாரிப்பு பணியில்

அஜித்துக்கு இணையான ஸ்டைல்.. 'விடாமுயற்சி' படத்தின் அர்ஜுன் போஸ்டர் வைரல்..!

அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் அஜித்தின் இரண்டு லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தை ஸ்தம்பிக்க வைத்தது என்பதை

தமிழ் ராக்கர்ஸ் அட்மினை முட்டிக்கு முட்டி போட வைத்த நடிகரின் மனைவி.. அதிர்ச்சி தகவல்..!

புதிய திரைப்படங்கள் வெளியான அடுத்த சில மணி நேரங்களில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் அந்த படம் திருட்டுத்தனமாக வெளியாகி வருவதை அடுத்து தயாரிப்பாளர்கள் மிகப்பெரிய நஷ்டம்