இந்த துணை எனக்கு எப்போது மகிழ்ச்சி அளிக்கும்: சமந்தா பகிர்ந்த புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Sunday,January 28 2024]

நடிகை சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் குதிரை சவாரி செய்யும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ள நிலையில் ’இந்த துணை எனக்கு எப்போதும் மகிழ்ச்சி அளிக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா என்பதும் அவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக திரையுலகிற்கு இடைவெளி விட்டுள்ளார்.

இருப்பினும் சமந்தா நடிப்பில் உருவான ‘குஷி’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது அவர் கைவசம் படங்கள் ஏதுமில்லை என்றாலும் அவர் முழு உடல் நலம் பெற்றவுடன் மீண்டும் தமிழ் தெலுங்கு திரை உலகை பிசி ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அவ்வப்போது தனது சமூக வலைதளத்தில் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வரும் சமந்தா சற்றுமுன் குதிரை சவாரி செய்யும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். அதில் அவர் 'The company of animals’ என பகிர்ந்து உள்ளதை அடுத்த இந்த புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.