நான் உங்களது வார்த்தையை ஏற்று கொள்கிறேன்.. நன்றி தேவி: சமந்தா
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை சமந்தா நவராத்திரி விழாவில் கலந்து கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து "நான் உங்கள் வார்த்தையை ஏற்றுக்கொள்கிறேன். நன்றி, தேவி" என கேப்ஷனாக கூறியுள்ளதை அடுத்து இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையான சமந்தா, சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக திரையுலகில் இருந்து தற்காலிகமாக வெளியேறினார். தற்போது அவர் முழுமையாக குணமடைந்த நிலையில் ஒரு தெலுங்கு படம் மற்றும் ஒரு ஹிந்தி வெப் தொடரில் நடித்ஹ்டு வருகிறார். மேலும், அவர் மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும், தமிழில் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் நிலையில், அவரது பக்கத்தை சுமார் 36 மில்லியன் பேர் பின் தொடர்ந்து உள்ளனர். இந்த நிலையில், சற்றுமுன் அவர் நவராத்திரி விழாவில் கலந்து கொண்ட புகைப்படத்தை பதிவுசெய்து, "நான் உங்கள் வார்த்தையை ஏற்றுக் கொள்கிறேன். நன்றி, தேவி. அனைவருக்கும் மகிழ்ச்சியான நவராத்திரி வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளார்.
இந்த பதிவுக்கு 12 லட்சத்துக்கும் அதிகமான லைக் குவிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments