கருப்பு வெள்ளை காஸ்ட்யூமில் சமந்தாவின் கிளாமர் தோற்றம்: வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Sunday,July 04 2021]

பொதுவாக நடிகைகளுக்கு திருமணம் ஆகிவிட்டால் படவாய்ப்புகள் குறைந்து விடும் என்பதும் அப்படியே பட வாய்ப்புகள் கிடைத்தாலும் அக்கா, அம்மா போன்ற கேரக்டர் தான் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் திருமணத்திற்குப் பின்னரும் நாயகியாக தொடர்ந்து நடித்து வருவதுமட்டுமின்றி பல சூப்பர் ஹிட் படங்களை தொடர்ச்சியாக கொடுத்து வருகிறார் என்றால் அது அனேகமாக சமந்தா மட்டுமே என்று தான் கூற வேண்டும்

சமந்தாவுக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகியும் தமிழ் தெலுங்கு திரையுலகில் தற்போது அவர் முன்னணி நடிகையாக உள்ளார் என்பதும், சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ’தி ஃபேமிலிமேன் 2’ வெப்தொடர் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் சமந்தாவுக்கு 17 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவரது ஒவ்வொரு பதிவிற்கும் மில்லியன் கணக்கில் லைக்ஸ்கள் குவியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் அவர் கருப்பு-வெள்ளை காஸ்டியூமில் கிளாமரான புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் 21 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக சமந்தா, ’வாழ்க்கையில் நீங்கள் கடந்து வந்த எல்லாவற்றையும் பற்றி யோசித்துப் பாருங்கள், அதை உங்களால் திரும்ப பெற முடியாது, ஆனால் நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள்’ என்று தெரிவித்துள்ளார்.