108 முறை சூரிய நமஸ்காரம் தொடங்கிய முன்னணி தமிழ் நடிகை!

  • IndiaGlitz, [Saturday,September 12 2020]

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த கடந்த 5 மாதங்களாக திரைப்பட படப்பிடிப்பு எதுவும் இல்லாததால் பல நடிகர் நடிகைகள் வீட்டில் சும்மா இருந்தனர் என்பதும், அவ்வப்போது தங்களது சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மட்டும் பதிவு செய்து வந்தனர் என்பதும் ஒரு சிலர் சமையல் குறிப்புகளையும் பதிவு செய்தனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த கொரோனா விடுமுறையை உருப்படியாக செலவு செய்த ஒரு சிலரில் நடிகை சமந்தாவும் ஒருவர். யோகா மற்றும் உடற்பயிற்சிக்கு அதிக நேரம் செலவு செய்த சமந்தா, வீட்டிலேயே தோட்டம் அமைக்கும் முயற்சியையும் செய்தார். அவரது இந்த முயற்சிகளுக்கு மிகப் பெரிய பாராட்டுக்கள் குவிந்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில்தான் அடுத்ததாக தற்போது 108 முறை சூரிய நமஸ்காரம் செய்யும் முறையை ஆரம்பித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறிய போது ’ஒரு நல்ல தொடக்கமாக இந்த வாரம் முதல் 108 முறை சூரிய நமஸ்காரத்தை ஆரம்பிக்க உள்ளேன். எனது பயிற்சியாளர் சந்தோஷ் அவர்களுக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்

இதுகுறித்து பயிற்சியாளர் சந்தோஷ் அவர்கள் கூறியபோது ’சமந்தா அவர்கள் மிகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஒரு செயலைச் செய்வார். அவர் எந்தவிதமான குறுக்கு வழியையும் பயன்படுத்தாமல் கடின உழைப்பு ஒன்றையே அவர் மூலதனமாகக் கொண்டு தனது குறிக்கோளை அடைந்து வருகிறார். அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள்’ என்று தெரிவித்துள்ளார். சமந்தாவின் 108 முறை சூரிய நமஸ்காரம் வெற்றியடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் படப்பிடிப்பு தற்போது தொடங்கி விட்டதால் விரைவில் அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது