வருத்தப்படாத வாலிபனுடன் இணைந்தார் சமந்தா

  • IndiaGlitz, [Friday,July 07 2017]

வருத்தப்படாத வாலிபன்', 'ரஜினிமுருகன்' ஆகிய இரண்டு வெற்றி படங்களை அடுத்து மீண்டும் இணைந்த சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணியின் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது என்பதை பார்த்தோம். இந்த படத்தில் முதன்முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகிறார் சமந்தா
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பில் சமந்தா இணைந்துள்ளார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து படக்குழுவினர் வரவேற்றனர்.
24 ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் இந்த படத்தில் சிம்ரன் மற்றும் நெப்போலியன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர். டி.இமான் இசையமைப்பில் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில், விவேக் ஹர்சன் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்திற்கு கவிஞர் யுகபாரதி அனைத்து பாடல்களையும் எழுதுகிறார். டி.முத்துராஜ் கலை இயக்குனராகவும், ஸ்டண்ட் இயக்குனராக அனல் அரசும் பணிபுரிந்து வருகின்றனர்.

More News

'தல' தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

திரையுலகின் 'தல' அஜித் என்றால் கிரிக்கெட் உலகின் 'தல' தோனி தான். புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரரும் வெற்றிகரமான கேப்டன்களுள் ஒருவருமான மகேந்திர சிங் தோனி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

'பிக்பாஸ்' வின்னர் யார்? பிரபல நடிகர் கணிப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பலர் கழுவிகழுவி ஊற்றினாலும் இன்றைய தமிழகத்தின் ஹாட் டாக் அந்த நிகழ்ச்சிதான்.

'விவேகம்' படத்திற்காக இயக்குனர் சிவா எழுதிய பாடல் இதுதான்

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடித்துள்ள 'விவேகம்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரவுள்ளது.

தல அஜித்தின் 'விவேகம்' ரன்னிங் டைம்

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் ஹாலிவுட் படத்திற்கு இணையாக பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

அஜித்துக்கு 'ஏகே', கருணாகரனுக்கு 'ஆப்ஸ்': விவேகம் அப்டேட்ஸ்

தல அஜித் நடித்துள்ள 'விவேகம்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரையில் விருந்தாக வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தில் அஜித், கருணாகரன் ஆகியோர்களின் கேரக்டர் பெயர் மற்றும் இருவருக்குமான காட்சிகள் குறித்து இயக்குனர் சிறுத்தை சிவா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.