'ஊ சொல்றியா, ஊஊ சொல்றியா' பாடல்: சமந்தாவின் ரிகர்சல் வீடியோ!
- IndiaGlitz, [Thursday,January 06 2022]
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் வசூலை வாரி குவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு இந்த படத்தில் இடம்பெற்ற சமந்தாவின் ஐட்டம் பாடலான ’ஊ சொல்றியா, ஊஊ சொல்றியா’ என்ற பாடல் மிகப் பெரிய அளவில் உதவியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலுக்கு ஆண்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்த போதிலும் பட்டிதொட்டி எங்கும் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த பாடல் படமாக்கப்படும் முன் ரிகர்சல் செய்யப்பட்ட போது எடுத்த வீடியோவை சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் குவிந்து உள்ளனர் என்பதும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.