சமந்தாவின் 'சாவித்திரி' கனவு என்ன ஆயிற்று?
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகின் நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் பிரபல நடிகை சமந்தா நடிக்கவுள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் சமந்தா நடிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது
இந்த படத்தில் சாவித்திரி கேரக்டரில் நடிக்கும் நடிகை இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்றும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
சாவித்திரியின் கேரக்டரில் நடிக்க அனுபவம் உள்ள பிரபல நடிகை தேவை என்பதால் வித்யாபாலன் மற்றும் நித்யாமேனன் உள்ளிட்ட சில நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. நடிகையர் திலகத்தின் உருவத்தை மீண்டும் நம் கண்முன் கொண்டு வரும் நடிகை யார்? என்பதை படக்குழுவினர் அறிவிக்கும் வரை பொறுமை காப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com