close
Choose your channels

சூப்பர் ஸ்டார் படத்தில் சமந்தா நடிப்பது உறுதி. மேனேஜர் தகவல்

Sunday, August 30, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடித்த 'ஸ்ரீமந்துடு' ரிலீஸான அதே நாளில் அந்த படத்தின் தமிழ் பதிப்பான 'செல்வந்தன்' திரைப்படமும் ரிலீஸாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மகேஷ்பாபு நடிக்கும் முதல் நேரடி தமிழ்ப்படம் 'பிரமோத்சவம்' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகவுள்ள இந்த படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக சமந்தா மற்றும் காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் கடந்த சில நாட்களாக இந்த படத்தில் இருந்து சமந்தா விலகிவிட்டதாகவும் அதற்கு ஒருசில காரணங்களையும் சில ஊடகங்கள் வெளியிட்டு வந்த நிலையில் சமந்தாவின் மேனேஜர், இந்த படத்தில் சமந்தா நடிப்பதை உறுதி செய்துள்ளார். வரும் செப்டம்பர் 20ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும், அந்த படப்பிடிப்பில் சமந்தா கலந்து கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் சூப்பர் ஸ்டாரின் படத்தில் சமந்தா நடிப்பது உறுதியாகியுள்ளது.

மகேஷ்பாபு, சமந்தா, காஜல் அகர்வால், ப்ரணிதா, சத்யராஜ், ஜெயசுதா, ரேவதி, மற்றும் பலர் நடிக்கவுள்ள இந்த திரைப்படத்தை பிவிபி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஸ்ரீகாந்த் அடலா இயக்கவுள்ள இந்த படத்திற்கு மிக்கி ஜெ.மெயர் இசையமைக்கவுள்ளார். இவர் "இனிது இனிது" என்ற தமிழ்ப்படம் உள்பட பல தெலுங்கு படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் 2016ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment