சமந்தாவை தொடர்ந்து அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை.

  • IndiaGlitz, [Friday,June 14 2024]

 

1992 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த நடிகை ஆதா சர்மா ஹிந்தி மற்றும் தெலுங்கு திரையில் தோன்றிய ஒரு முக்கியமான இந்திய நடிகை ஆவார்.இவர் கல்லூரி படிப்பை முடித்து 2008ஆம் ஆண்டு 1920என்ற திகில் படத்தின் முன்னணி கதாபாத்திரமாக நடித்து பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பெற்றது.சினிமா ரீதியாக நடிகை ஆதா ஷர்மாவின் படம் பேசுபொருளாக அமைந்தன.அதுமட்டுமில்லாமல் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக சிறந்த அறிமுக நடிகையாக பெஸ்ட் பிலிம்பார் விருதும் வழங்கப்பட்டது.

இவரது தந்தை தமிழ் பிராமணர் மற்றும் மதுரையை சேர்ந்தவர் மற்றும் தாயார் ஷீலா சர்மா மலையாளி கேரளா பாலக்காட்டின் நாட்டுப்புறாவை பூர்விகமாக கொண்டவர் .மேலும் ஆதா ஷர்மா ஒரு பாரம்பரிய நடன கலைஞர் மற்றும் மல்லகம்பா யோகா பயிற்சியாளர் ஆவார்.

ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க விரும்பிய சர்மா பல வேடங்களில் நடித்தார்.ஆனால் நிறைய வாய்ப்புகள் நிராகரிக்கப்பட்டன.அவர் தோற்றங்களை வைத்தும் இன்னும் சில காரணங்களுக்காகவும் அவர் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டார்.

இறுதியில் விக்ரம் பட் இயக்கிய 1920இல் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து விமர்சர்களை கவர்ந்தார்.ஆட்கொண்ட பெண்ணாக இவர் நடித்தவை அனைவரையும் ஒரு மனதாராக பாராட்ட வைத்தன.இந்த திரைப்படம் வணீக ரீதியாகவும் வெற்றி பெற்றன.

திரை உலகில் தொடர்ச்சியாக சமந்தா பாஹத் பாசில் தொடர்ந்து அரிய வகை நோயால் தற்போது ஆதா ஷர்மாவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஆறுதல் கூறி வருகின்றனர்.நடிகை ஷர்மா எண்டோமெட்ரி ஓசிஎஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு வருவதாக அறிவித்துள்ளார்.இதன் காரணமாக இடுப்பை சுற்றி நரக வலியை அனுபவிப்பதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் .