மீண்டும் நடிப்புக்கு திரும்பி விட்டேன்.. அடுத்த வாரம் ஒரு சர்ப்ரைஸ்: சமந்தா
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை சமந்தா கடந்த சில மாதங்களாக நடிப்பிற்கு ஓய்வு அளித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் நடிப்புக்கு திரும்பிவிட்டதாக அவர் அறிவித்துள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை சமந்தா மயோசிட்டி சென்ற நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக வெளிநாடு சென்று இருந்தார். இதன் காரணமாக அவர் ஒப்புக்கொண்டிருந்த சில படங்களில் இருந்து விலகி விட்டதாகவும், புதிதாக படங்களை ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் முழு உடல் நலம் பெற்று இருப்பதை அடுத்து அவர் நடிப்பில் உருவாக இருந்த ’சிட்டாடல்’ என்ற வெப் தொடரின் பணிகள் தொடங்கி விட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் சமந்தா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் தான் நடிப்புக்கு திரும்பி விட்டதை உறுதி செய்துள்ளார். நடிப்புக்கு மீண்டும் திரும்புகிறேன், இந்த இடைப்பட்ட காலத்தில் சில மாதங்கள் வேலை இல்லாமல் இருந்தேன். ஆனால் என் நண்பருடன் உடல் ஆரோக்கியம் குறித்து உருவாக்கியுள்ள பாட்காஸ்ட் ஒன்றை அடுத்த வாரம் வெளியிடுகிறேன், அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் வெளியாகவுள்ள அந்த வீடியோவில் என்ன சர்ப்ரைஸ் இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Samantha has every reason to fall in love 😘 ❤️#SamanthaRuthPrabhu #Samanthapic.twitter.com/ODFITmFJnv
— P R O F E S S O R 😈 (@Professor_289) February 10, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com