'யசோதா' வெற்றியை கொண்டாடும் சமந்தா.. என்ன சொல்லியிருக்கார் பாருங்கள்!

  • IndiaGlitz, [Saturday,November 19 2022]

நடிகை சமந்தா நடித்த ’யசோதா’ திரைப்படம் நவம்பர் 11ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் சமந்தா இந்த வெற்றி குறித்து தனது சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது:

ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம்! ’யசோதா’ படத்தை பார்த்து நீங்கள் பாராட்டியதை கேட்டு மிகப்பெரிய மகிழ்ச்சி அடைந்தேன். ’யசோதா’ குழுவினர் உழைத்த அத்தனை உழைப்பும் பலனளித்தது என்பதற்கு உங்கள் விசில் சத்தமே சான்றாக உள்ளது

நான் தற்போது சந்தோஷத்தில் மிதந்து வருகிறேன். மேலும் மசோதா படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தில் என்னை நம்பி பெரிய கேரக்டர் கொடுத்ததற்காக தயாரிப்பாளர் கிருஷ்ண பிரசாத் மற்றும் இயக்குனர் ஹரி, ஹரீஸ் ஆகியோர்களுக்கு எனது நன்றி.

வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், மற்றும் மற்ற அற்புதமான நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியது அருமையாக இருந்தது. அனைவருக்கும் எனது பணிவான நன்றி’ என்று சமந்தா அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

More News

கர்ப்பம் குறித்த வதந்திக்கு விளக்கம் அளித்த நடிகை நிக்கி கல்ராணி!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவரான நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக ஒரு சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வரும் நிலையில் அதற்கு நிக்கி கல்ராணி விளக்கம் அளித்துள்ளார். 

நயன்தாராவுடன் மோதும் விஷால்.. வெற்றி யாருக்கு?

நயன்தாரா நடித்த திரைப்படம் வெளியாகும் நாளில் விஷால் நடித்த திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் மோதுவதால் வெற்றி யாருக்கு

ஜெயிலிலும் ஒன்றாகவே ராபர்ட்-ரக்சிதா: வீடியோ வைரல்

பிக்பாஸ் போட்டியாளர்களான ராபர்ட் மற்றும் ரக்சிதா ஆகிய இருவரும் சிறைக்கு அனுப்பப்படும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தாடி பாலாஜி - நித்யா போல் இன்னொரு கணவன் - மனைவியா? களை கட்டப்போகும் பிக்பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தாடி பாலாஜி மற்றும் நித்யா தம்பதிகள் ஒரே சீசனில் கலந்து கொண்டார்கள் என்பதும் அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்த நிலையில் இருவரையும் கமல்ஹாசன்

இந்த வாரம் எவிக்சன் இவர் தான்.. வெளியே போனதும் முதலில் இதை செய்வாரோ?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று 40வது நாள் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.