ரத்தக்காயங்களுடன் சமந்தாவின் புகைப்படம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
- IndiaGlitz, [Tuesday,February 28 2023]
ரத்த காயங்களுடன் இருக்கும் புகைப்படத்தை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கும் நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா என்பதும் அவர் கடந்த சில வாரங்களாக மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பதும் தெரிந்ததே. தற்போது அவர் மயோசிட்டிஸ் நோயிலிருந்து படிப்படியாக குணமாகி தீவிர உடற்பயிற்சி செய்து வருகிறார் என்பதையும் அவர் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டா நடித்து வரும் ‘குஷி’ மற்றும் ’சிட்டாடல்’ என்ற பாலிவுட் வெப் தொடர் ஆகியவற்றில் சமந்தா நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நிலையில் அவரது கையில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பதிவு செய்து ’மற்றவர்களுக்கு வேண்டுமானால் இது காயமாக இருக்கலாம், ஆனால் என்னை பொருத்தவரை இதுதான் என்னுடைய நகை’ என்று தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டதை கூட அவர் எளிதாக எடுத்துக் கொண்டது அவருடைய தொழில் அர்ப்பணிப்பு உணர்வை காட்டுகிறது என ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அவர் விரைவில் முழுமையான குணமடைய வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர். சமந்தா பதிவு செய்த இந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாக வருகிறது.